அம்சங்கள் குறித்த மேலோட்டம்
Google உள்ளீட்டு கருவி, உங்கள் விருப்பமான மொழியில் மிகவும் எளிதாக தட்டச்சு செய்ய உங்களுக்கு உதவுகிறது. நாங்கள் தற்போது வழங்கும் பல்வேறு வகையான உரை உள்ளீட்டு கருவி:
- IME (உள்ளீட்டு முறை திருத்திகள்), மாற்றல் என்ஜினைப் பயன்படுத்தி உங்கள் விசைஅழுத்தங்களை மற்றொரு மொழிக்குப் பொருத்தும்.
- ஒலிபெயர்ப்பு, ஒரு மொழியில் உள்ள உரையின் ஒலிகள்/ஒலிப்புமுறைகளை, ஒலிகளின் சிறந்த பொருத்தங்கள் உள்ள மற்றொரு மொழிக்கு மாற்றும். எடுத்துக்காட்டாக, ஒலிபெயர்ப்பானது "namaste" ஐ இந்தியில் “नमस्ते” க்கு மாற்றும்.
- விர்ச்சுவல் விசைப்பலகை உங்களின் வழக்கமான விசைப்பலகையில் உள்ள விசைகளுடன் பொருத்தும் விசைப்பலகையை உங்கள் திரையில் காண்பிக்கும். திரையில் உள்ள விசைப்பலகைத் தளவமைப்பைப் பொறுத்து நீங்கள் வேறொரு மொழியில் நேரடியாக தட்டச்சு செய்யலாம்.
- கையெழுத்து, உங்கள் விரல்களினால் எழுத்துகளை வரைவதன் மூலம் உரையில் தட்டச்சு செய்ய அனுமதிக்கும். கையெழுத்து தற்போது Google உள்ளீட்டு கருவி Chrome நீட்டிப்பில் மட்டுமே உள்ளது.
Google கணக்கு அமைப்புகளில் எப்படி உள்ளீட்டு கருவியை உள்ளமைப்பது என்பதை அறியவும்.
Google தயாரிப்புகளில் உள்ளீட்டு கருவியை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறியவும், இதில் Gmail, இயக்ககம், தேடல், மொழியாக்கம், Chrome மற்றும் ChromeOS ஆகியவை அடங்கும்.
இதை முயற்சிக்க, எங்கள் செயல்விளக்கப் பக்கத்திற்குச் செல்லவும்.