உள்ளீட்டு முறை (IME)
உள்ளீட்டு முறை திருத்திகள் (IMEகள்), விசை அழுத்தங்களை வேறொரு மொழியின் எழுத்துகளுக்கு மாற்றுகின்றன. பல IMEகளை வழங்குகிறோம். அவற்றை முயற்சிக்கவும்.
IME ஐப் பயன்படுத்துவதற்கு முதலில் உள்ளீட்டு கருவியை இயக்க வேண்டும். தேடல், Gmail, Google இயக்ககம், Youtube, மொழியாக்கம், Chrome மற்றும் Chrome OS ஆகியவற்றில் உள்ளீட்டு கருவியை இயக்குவதற்கு பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
IME ஆனது, ஐப் போன்று மொழியிலிருக்கும் எழுத்தால் குறிப்பிடப்படுகிறது.நடப்பு IME ஐ இயக்கு/முடக்கு என்பதற்கு இடையில் மாற ஐகானைக் கிளிக் செய்யவும் அல்லது வேறொரு உள்ளீட்டு கருவியைத் தேர்ந்தெடுக்க இதற்கு அடுத்துள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்யவும். IME இயக்கப்படும்போது, பொத்தான் ஆனது அடர் சாம்பல் நிறமாக மாறும்.
லத்தீன் IMEகள்
லத்தீன் IMEகள், யுஎஸ் விசைப்பலகையைப் பயன்படுத்தி லத்தீன் ஸ்கிரிப்ட் மொழிகளில் தட்டச்சு செய்ய பயனர்களுக்கு உதவுகின்றன (எ.கா., ஃப்ரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், இத்தாலியன் மற்றும் டச்சு). அம்சங்களில் தானியங்கு ஒலிக் குறியீட்டுப்புள்ளிகள், எழுத்துப்பிழை திருத்தம் மற்றும் முன்னொட்டு பூர்த்திசெய்தல் ஆகியவை உள்ளடங்கும்.
லத்தீன் IMEகளைப் பயன்படுத்த, ஒலியழுத்தமில்லா எழுத்துகளைத் தட்டச்சு செய்யவும், ஒலிக் குறியீட்டுப்புள்ளிகள் உள்ள சரியான சொல் பரிந்துரைக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஃப்ரெஞ்சில், ‘franca’ என்று நீங்கள் தட்டச்சு செய்தால், முன்னோட்டு பூர்த்திசெய்யப்பட்ட பரிந்துரையைக் காண்பீர்கள்.
“français” என்ற பரிந்துரையைப் பயன்படுத்த TAB ஐ அழுத்தவும். இந்த நேரத்தில், மூல உரையைப் பயன்படுத்த SPACE/ENTER ஐ அழுத்தவும்.
தொடர்ந்து “francais” என்பதைத் தட்டச்சு செய்யும்போது, ஸ்டேஜில் இருக்கும் பரிந்துரையானது, தானியங்கு ஒலிக்குறியீடாக மாறிவிடும். “français” என்ற பரிந்துரையைப் பயன்படுத்த SPACE/ENTER ஐ அழுத்தவும்.
மேலும் பரிந்துரைகளைப் பெற, BACKSPACE ஐ அழுத்தவும், இப்போது எல்லா பரிந்துரைகளையும் பார்ப்பீர்கள்.
முதல் பரிந்துரைதான் அதிக நம்பிக்கையுள்ள தானியங்கு ஒலிக்குறியீட்டுப் பரிந்துரையாகும், இது தானாகவே தனிப்படுத்தப்படும். இரண்டாவது பரிந்துரையானது, மூல உரையாகும். மூன்றாவது மற்றும் நான்காவது பரிந்துரைகளானவை, முன்னொட்டு பூர்த்திசெய்யப்பட்ட பரிந்துரைகளாகும். 5வது மற்றும் 6வது பரிந்துரைகள், எழுத்துப்பிழை திருத்தப் பரிந்துரைகளாகும்.
பல பரிந்துரைகளிலிருந்து சொல்லைத் தேர்ந்தெடுக்க, பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளவும்:
- தனிப்படுத்தப்பட்ட பரிந்துரையைத் தேர்ந்தெடுக்க SPACE/ENTER ஐ அழுத்தவும்,
- அதில் கிளிக் செய்யவும்,
- சொல்லுக்கு அடுத்துள்ள எண்ணைத் தட்டச்சு செய்யவும்,
- பக்கத்தில் உள்ள பரிந்துரைகளின் பட்டியலில் UP/DOWN விசைகள் மூலம் வழிசெலுத்தவும். UP/DOWN விசைகள் மூலம் பக்கங்களைத் திருப்பவும்.