Google இயக்ககம்/ஆவணம்
Google இயக்ககம்/ஆவணத்தில் உள்ளீட்டு கருவியை எப்படி இயக்குவது என்பதைப் பற்றி விரைவாக அறிய கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.
Google இயக்ககத்தில் உள்ளீட்டு கருவியை இயக்க மூன்று வழிகள் உள்ளன:
- பயனர் மொழி அமைப்பை நீங்கள் தட்டச்சு செய்ய விரும்பும் மொழிக்கு மாற்றவும். இதைச் செய்ய, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.
- ஆவணத்தின் மொழி அமைப்பை நீங்கள் தட்டச்சு செய்ய விரும்பும் மொழிக்கு மாற்றவும். இதைச் செய்ய, புதிய ஆவணத்தை உருவாக்கவும் அல்லது ஏற்கனவே உள்ள ஆவணத்தைத் திறக்கவும். கோப்பு → மொழி என்பதைச் செல்லவும். பின்னர், நீங்கள் பயன்படுத்த விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
- Gmail இல் உள்ளீட்டு கருவியை இயக்கவும்.
உள்ளீட்டு கருவியை இயக்கியவுடன், கருவிப்பட்டியின் வலதுபக்கத்தில் (அல்லது RTL பக்கத்தின் இடதுபக்கத்தில்) ஐகானைக் காண்பீர்கள்.
தனிப்பட்ட உள்ளீட்டு கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது தொடர்பான கட்டுரைகள்:
- ஒலிபெயர்ப்பை எப்படிப் பயன்படுத்துவது
- உள்ளீட்டு முறையை (IME) எப்படிப் பயன்படுத்துவது
- விர்ச்சுவல் விசைப்பலகையை எப்படிப் பயன்படுத்துவது
- கையெழுத்தை எப்படிப் பயன்படுத்துவது
தொடர்பான Google வலைப்பதிவு இடுகைகள்: