Gmail

Gmail இல் உள்ளீட்டு கருவியை எப்படி அமைப்பது என்பதைப் பற்றி விரைவாக அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.

Gmail இல் உள்ளீட்டு கருவியை இயக்க, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  1. மேல் வலதுபக்கத்தில் உள்ள பற்சக்கர ஐகானைக் கிளிக் செய்து, பிறகு “அமைப்புகள்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. பொது தாவலில், "மொழி" பிரிவின் கீழ் "உள்ளீட்டு கருவியை இயக்கு" என்பதற்கு அடுத்துள்ள செக் பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. தோன்றுகிற “உள்ளீட்டு கருவி” அமைப்பு உரையாடலில், “எல்லா உள்ளீட்டு கருவிகளும்” புலத்திலிருந்து நீங்கள் விரும்பும் உள்ளீட்டு கருவியைத் தேர்ந்தெடுக்கவும், பிறகு சாம்பல்நிற அம்பைக் கிளிக் செய்யவும். இதனால் அது “தேர்ந்தெடுத்த உள்ளீட்டு கருவி” புலத்தில் தோன்றும்.
    • “தேர்ந்தெடுத்த உள்ளீட்டு கருவி” புலத்தில் உள்ளீட்டு கருவியைச் சேர்க்க அதில் இரு கிளிக்கும் செய்யலாம்
    • கருவியைக் கிளிக் செய்து, பிறகு தோன்றும் மேல்/கீழ் அம்புக்குறியைக் கிளிக் செய்வதன் மூலம் தேர்ந்தெடுத்த உள்ளீட்டு கருவியை மறு வரிசைப்படுத்தலாம்
  4. அமைப்பு உரையாடலில் சரி என்பதைக் கிளிக் செய்க
  5. பொது தாவலின் கீழே உள்ள மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்க

உள்ளீட்டு கருவியை இயக்கியபின், பற்சக்கர ஐகானின் இடதுபக்கத்தில் உள்ளீட்டு கருவி ஐகானைக் காண்பீர்கள், எ.கா. .

இந்த Gmail வலைப்பதிவு இடுகை (Google மற்றும் என்டர்பிரைஸ் வலைப்பதிவுகளில் ஒரே நேரத்தில் இடுகையிடப்பட்டது), Gmail இல் எல்லா மொழிகளிலும் தொடர்புகொள்வதை உள்ளீட்டு கருவி எப்படி மிகவும் எளிதாக்குகிறது என்பதை அறிமுகப்படுத்துகிறது.

தனிப்பட்ட உள்ளீட்டு கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது தொடர்பான கட்டுரைகள்: