விர்ச்சுவல் விசைப்பலகை
விர்ச்சுவல் விசைப்பலகை அல்லது “திரை” விசைப்பலகை ஆனது, நீங்கள் எங்கிருந்தாலும், எந்தக் கணினியைப் பயன்படுத்தினாலும் நேரடியாக உங்கள் உள்ளூர் மொழி ஸ்கிரிப்ட்டில் எளிதாகவும், சீரான முறையிலும் தட்டச்சு செய்ய உங்களை அனுமதிக்கிறது. விர்ச்சுவல் விசைப்பலகைகளின் சில பொதுவான பயன்பாடுகள்:
- வெளிநாட்டு விசைப்பலகைகளில் தனது சொந்த மொழியில் ஒருவரைத் தட்டச்சு செய்ய அனுமதித்தல் - வெளிநாட்டிற்கு பயணிக்கும்போது அல்லது வேறொரு நாட்டில் வாழும்போது போன்ற நேரங்களில்.
- திரை கிளிக்குகள் மூலமாக தட்டச்சு செய்வதை அனுமதிப்பதன் மூலம் மேலும் அணுகத்தக்க தட்டச்சு அனுபவத்தை வழங்குகிறது,
- வெவ்வேறு எழுத்து அமைப்புகள் மற்றும்/அல்லது எழுத்துகளுக்கு இடையே மாறுவதற்கு விரைவான, எளிமையான வழியை வழங்குதல்.
விர்ச்சுவல் விசைப்பலகையானது, 70 க்கும் அதிகமான மொழிகள் கொண்ட சுமார் 100 விசைப்பலகைகளில் கிடைக்கிறது. விர்ச்சுவல் விசைப்பலகையை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி அறிய இந்த பயிற்சி வீடியோவைப் பார்க்கவும். மேலும் இதை ஆன்லைனிலும் முயற்சிக்கவும்.
விர்ச்சுவல் விசைப்பலகையைப் பயன்படுத்துவதற்கு முதலில், உள்ளீட்டு கருவியை இயக்க வேண்டும். தேடல், Gmail, Google இயக்ககம், Youtube, மொழியாக்கம், Chrome மற்றும் Chrome OS ஆகியவற்றில் உள்ளீட்டு கருவியை இயக்குவதற்கு பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
விர்ச்சுவல் விசைப்பலகைகள் விர்ச்சுவல் ஐகானால் குறிப்பிடப்படுகின்றன. நடப்பு IME ஐ இயக்கு/முடக்கு என்பதற்கு இடையில் மாற ஐகானைக் கிளிக் செய்தல் அல்லது வேறொரு உள்ளீட்டு கருவியைத் தேர்ந்தெடுக்க இதற்கு அடுத்துள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்தல். விர்ச்சுவல் விசைப்பலகை இயக்கப்படும்போது, பொத்தானானது அடர் சாம்பல் நிறமாக மாறும்.
விர்ச்சுவல் விசைப்பலகையாக இருந்தாலும் உங்கள் சொந்த விசைப்பலகையில் தட்டச்சு செய்தோ அல்லது உங்கள் சுட்டி மூலம் விர்ச்சுவல் விசைப்பலகையில் நேரடியாக விசைகளைக் கிளிக் செய்தோ விர்ச்சுவல் விசைப்பலகையைப் பயன்படுத்தவும்.
திரையில் தோன்றும் விசைப்பலகையைச் சிறிதாக்க, திரையில் தோன்றும் விசைப்பலகைக்கு மேல் வலதுபக்கத்தில் உள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்க.