Google கணக்கு அமைப்புகள்
உங்கள் Google கணக்கு அமைப்புகளில் உள்ளீட்டு கருவியைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது அவற்றின் அமைப்புகளைத் திருத்தலாம். உங்கள் உள்ளமைவு எல்லா Google தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படும்.
Google கணக்கு அமைப்புகளில் உள்ளீட்டு கருவியைத் திருத்த, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:
- “மொழி” → “உள்ளீட்டு கருவி” → "திருத்து” என்பதற்குச் செல்லவும்.
- தோன்றுகின்ற "உள்ளீட்டு கருவி அமைப்புகள்" என்பதில், நீங்கள் பயன்படுத்த விரும்பும்
உள்ளீட்டு கருவியைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஒலிபெயர்ப்புகள் மற்றும் IMEகள் ஆகியவை மொழியின் எழுத்துகளால் குறிக்கப்படுகின்றன, மராத்தி ஒலிபெயர்ப்புக்கு ஆகவும், சீனத்தின் பின்யின் IME க்கு ஆகவும் குறிக்கப்படுகின்றன.
- விர்ச்சுவல் விசைப்பலகைகள், விசைப்பலகை ஐகானால் குறிக்கப்படுகின்றன.
- கையெழுத்து IMEகள், பேனா ஐகானால் குறிக்கப்படுகின்றன.
- உங்கள் அமைப்புகளைத் திருத்தியபின், "சேமி" என்பதைக் கிளிக் செய்யவும்.
தற்போது, நாங்கள் வழங்கும் மூன்று அமைப்புகள்:
- திரையில் விசைப்பலகையைக் காட்டுதல்/மறைத்தல்.
- நிலைப் பட்டியைக் காட்டுதல்/மறைத்தல். இந்த அமைப்புகள், சீனத்திற்கான பின்யின், வூபி, கான்ஜி, ஜூயின், கான்டோனீஸ் IMEகள் ஆகியவை முழுவதும் பயன்படுத்தப்படும்.
- பயனர் அகராதியை ஒத்திசைத்தல்/ஒத்திசைக்காமல் இருத்தல். உங்கள் பயனர் அகராதியானது எங்களுடைய கருவியைப் பயன்படுத்தி நீங்கள் சமீபத்தில் உள்ளிட்ட சொற்களைச் சேமிக்கும், மேலும் எதிர்கால மாற்றங்களுக்காக எங்களின் துல்லியத்தன்மையை மேம்படுத்த உதவும். ஒத்திசைப்பதை நீங்கள் இயக்கும்போது, Google தயாரிப்புகள் (Android, Gmail மற்றும் Drive போன்றவை) முழுவதிலும் உங்கள் அகராதியை ஒத்திசைப்பீர்கள். தற்போது, சீனத்தின் பின்யின் IME உடன் மட்டுமே பயனர் அகராதி பயன்படுத்தப்படுகிறது.